Sunday, September 21, 2014

ஒரு அப்பாவின் இதயம் அயல்நாட்டிலிருந்து 


புதியதோர் உலகைக்  காண
ஆசை தீயாய் எரிந்தது
அனுமதி கிடைத்த  இரண்டொரு
நாளில் உறவுகள் பிரிந்தது
பூமிப்பந்தின் புதிய இடத்தில்
புதிய காற்றை சுவாசித்தேன்

தொலைபேசி என் மனைவியானது
                           என் குழந்தையானது
அவர்களின் அன்பின் மொழி    
     என் செவியை  நிரப்பியது

செவிக்கு  உணவில்லாதபோது சிறிது
       வயிற்றுக்கும்  உணவிட்டேன்
எடையை இழந்தேன் பிரிவிற்கு
     சான்றாய்  உடலை மெலிந்தேன்
புலன்கள் ஐந்தில் நான்கு சோர்ந்தது
       காது தொடர்ந்து  பிழைத்தது

மகனே உன்னைக்   காணாது  
    என் கருவிழி காய்ந்தன
உன் பரிசத்தை   உணராது
     என் நாசிகள் எரிந்தன
உன்னை அணைக்காத கைகள்
    அசைவின்றி நிலைத்தன
உன்னை தூக்கி திரியாத
    என் கால்கள் ஒடிந்தன


என் வானில் ஒளியில்லை
        நினைவுகள் திரண்டது மேகமாய்    
சுவடுகள் தெரியவில்லை என்
        பயணம்  தொலைதூரமாய்
கரைகள் தென்படவில்லை உன்
        அன்பு கலங்கரை விளக்கமாய்

மகனே உன் முத்தங்கள்
    என் கனவில் சத்தமானதே
உன் வார்த்தைகள்  என்
    கனவில் சொர்க்கமனதே!

தேனும் கசக்கிறது
நிறையும் பணமும் புளிக்கிறது
           நரகமும் இதுதானோ?

உன்னிடத்தில் விடியல்
    என்னிடத்தில் இரவு
என் இரவு விடிவது
                     எந்நாளோ?
                                       

                                                                 
                                                           ப.கோபாலகிருஷ்ணன்